வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

கெடா மாநிலத்தில் உள்ள 58 தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறி.
செவ்வாய் 16 ஜனவரி 2018 13:56:08

img

( நா. மணிராஜா)                                            

சுங்கைப்பட்டணி, ஜன. 16-

கெடா மாநிலத்தில் உள்ள 58 தமிழ்ப் பள்ளிகளில் குறைந்த மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை பெரியளவில் குறைந்து வருவதால் அப்பள்ளிகளின் எதிர்காலம் பெரும்  நிச்சயமற்றதாக இருக்கின்றன.  இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் நகர்ப்புற பகுதிகளில் அப்பள்ளிகளை இடம் மாற்றினால் மட்டுமே அவற்றின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்று  மக்கள்   நம்புகின்றனர். 

கெடா மாநிலத்தில் மிகவும் பழைமையான தமிழ்ப்பள்ளியான டப்ளின் தோட்டம் பிரிவு 7 தமிழ்ப்பள்ளியில் புதிய கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் எந்தவொரு மாணவர் பதிவும் இல்லை. ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் மட்டுமே ஐந்து மாணவர்கள் பயில்கின்றனர்.

இதேபோன்று 20 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நிலைமையை சமாளிக்க  தற்போது கெடா மாநிலத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் நகர்புறங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக கெடா மாநில தமிழ்ப் பள்ளிகளின் வாரிய மன்றத்தின் மேலாளர் கோ.குமரன் நேற்று இங்கு தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban News Paper on 16.1.2018

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img