வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

குடியுரிமை விண்ணப்பத்திற்கான அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் சிறார்கள், அரசாங்கப் பள்ளிகளுக்குச் செல்ல உரிமையுண்டு
வெள்ளி 12 ஜனவரி 2018 14:18:03

img

புத்ராஜெயா, 

மலேசிய குடியுரிமை விண்ணப்பத்திற்கான அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் சிறார்கள், அரசாங்கப் பள்ளிகளுக்குச் செல்ல உரிமையுண்டு என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பிள்ளைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் அந்தப்பிள்ளைகளை அரசாங்கப்பள்ளிகளில் கல்வி அமைச்சு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

இது போன்ற பிரச்சினைகளை யாரும் எதிர்நோக்கியிருந்தால் தமது அமைச்சின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். நேற்று உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

சிரம்பானில் ஏழு வயது சிறுமி டர்ஷனா, ஆவணப்பிரச்சினை காரணமாக பள்ளிக்குச் செல்ல இயலாமல் பள்ளியின் வாசலிலேயே காத்திருக்கும் அவல நிலை தொடர்பாக கருத்துரைக்கையில் ஜாஹிட் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

Read More: Malaysia nanban News Paper on 12.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img