செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

ரீஜெண்ட் த் தமிழ்ப்பள்ளிக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்
திங்கள் 08 ஜனவரி 2018 12:41:38

img

(துர்க்கா) தம்பின்,

சுமார் வெ. 80 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்காக 2 ஆண்டாக மாணவர்கள் காத்தி ருக்கும் ரீஜண்ட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளியை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுக்க ம.இ.கா.வால் முடியவில்லையா என்று பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். இப்பள்ளிக்கூட விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை  தம்பின், கெமஞ்சேவில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. ரீஜண்ட்  தோட்ட புதியத் தமிழ்ப்பள்ளி குறித்து இதில் பேசப்பட்டது.

கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் இழுபறி நிலையில் உள்ள இப்பள்ளிக்கூடம் குறித்து ம.இ.கா. தம்பின் தொகுதித் தலைவர் டத்தோ ராஜேந்திரன் வெறுமனே அறிக்கை விடுவதை விடுத்து, பள்ளியை திறப்பதற்கான காரியத்தில் இறங்க வேண்டும் என்று  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஆர்.தேவேந்திரம் (55) வலியுறுத்தினார். கறையான்களால் அரிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்த ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு பதில் புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்தது ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வீரப்பனும் மாணவர்க ளின் பெற்றோர்களும்  என்பது டத்தோ ராஜேந்திரனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் என்று பெற்றோர் சார்பாக எம்.மோகன் பேசுகையில் கூறினார்.

Read More: Malaysia Nanban News Paper on 8.1.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img