புதன் 14, நவம்பர் 2018  
img
img

தினகரனின் வெற்றி ஆகப்பெரிய அவமானம்
வெள்ளி 05 ஜனவரி 2018 13:38:50

img

சென்னை, 

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனின் வெற்றி கொண்டாடப்படுவது அவமானப்பட வேண்டியது  என்கிற ரீதியில் நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித் துள்ளார். ஜெ.வின் மறைவிற்கு பின் நடிகர் கமல்ஹாசன் அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வந்தார். அதன்பின், தனது விஸ்வரூபம்-2 பட வேலை காரணமாக கடந்த மாதம் அரசியல் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், பிரபல வார இதழில் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ஊர் அறிந்த குற்றம் இப்படி வெளிப்படையாக நடக்க மக்களும் உடந்தையாக இருப்பது தான் எவ்வளவு பெரிய சோகம். முதலமைச்சர் தொடங்கி சுயேச்சை வேட்பாளர் வரை வாக்காளர்களுக்கு பல ஆயிரங்கள் நிர்ணயித்து அதை கச்சிதமாக வழங்கியது ஊடகங்களில் வெளிவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், சுயேச்சை வேட்பாளரை நம்பி வாக்காளர்களே தங்களுக்கு உலை வைத்துக் கொண்டுள்ளனர். சுயேச்சையின் பதிலில் மயங்கிய சிலர் அவரின் வெற்றியின் வியூகங்களை பட்டியல் போட்டு பாராட்டி வருகின்றனர். இப்படி ஆகப்பெரிய அவமானம்  எந்த புள்ளியில் கொண்டாட்டமாக மாறுகிறது என்பது தான் தமக்கு பிடிபடாத கேள்வி எனவும் தம் வீட்டில் ஒருவருக்கு எந்த வழியிலாவது பணம் கிடைத்தால் போதும் என்ற சுயநலம் கொண்ட மக்கள் இருக்கும் வரை ஜனநாயகம் என்ற புனிதம் கெட்டு போய்விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img