ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் மேம்பாட்டு திட்டம்
திங்கள் 26 செப்டம்பர் 2016 14:02:04

img

ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த மேம்பாட்டுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் குரல் ஏ.பென்னம்பலம் தெரிவித்தார். சுமார் 48 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த குடியிருப்பில் தற்போது 525 குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் 180 இந்திய குடும்பங்கள் உள்ளன. கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மக்களின் போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இந்த மேம்பாட்டுத் திட்டத்தை முற்றாக நிறுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் நேற்று மாலை ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள திடலில் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இங்கு மேற்கொள்ளவுள்ள மேம்பாட்டுத் திட்டத்தை முற்றாக நிறுத்தக்கோரி பொதுமக்களிடம் பாரங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த விவகாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பார்வைக்கு மீண்டும் எடுத்து செல்லவுள்ளோம். இவ்வாண்டு இறுதியில் ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மகஜர் ஒன்றையும் வழங்கவுள்ளதாக பொன்னம்பலம் சொன்னார். அதுமட்டுமின்றி டத்தோ பண்டார், கூட்டரசுப் பிரதேச மாநில அமைச்சர் ஆகியோர் இங்குள்ள மக்களை சந்திக்க வேண்டும். மக்களின் நலன் கருதி இந்த மேம்பாட்டு திட்டத்தை முழுமையாக நிறுத்துவிட வேண்டும். இந்த உறுதிமொழியை மக்கள் மத்தியில் இரு தரப்பினரும் வழங்க வேண்டும் என அவர் கூறினார். அப்படி இந்த மேம்பாட்டுத் திட்டம் முற்றாக நிறுத்தப்படவில்லையென்றால் போராட்டம் தொடரும் என்ற அவர், அப்படி மேம்பாட்டுத் திட்டம் மீண்டும் மேற்கொள்ளப்பட்டால் இங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச வீடுகளை வழங்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் குடியிருப்பு விவகாரத்தில் பல தரப்புகள் செயல்பட்டு வருகின்றன. இனியும் வீடுகளின் அளவை அதிகமாக கேட்கும் கோரிக்கைகளை முன் வைக்காமல், இந்த மேம்பாட்டுத் திட்டத்தை முற்றாக நிறுத்த முயற்சி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img