img
img

அடுத்த ஆண்டு  பிப்ரவரி   இறுதியில்   நாடாளுமன்றத்தை  கலைக்கலாம் 
புதன் 20 டிசம்பர் 2017 16:10:06

img

கோலாலம்பூர்,

பிரதமர்  டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அடுத்த ஆண்டு  பிப்ரவரி   இறுதியில்   நாடாளுமன்றத்தை  கலைக்கலாம் என்று ஆரூடம் கூறப்பட்டுள்ளது. மார்ச் அல்லது ஏப்ரலில் நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. சிலாங்கூரில் தேர்தல் தொகுதி திருத்தங்கள் மீதான ஆட்சேபங்களை விசாரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவை தள்ளுபடி செய்யும் வழக்கில் தேர்தல் ஆணையம் (இ.சி.) வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவ்வாறு  நடக்கலாம் சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி சீனமொழி நாளேடான சின் சியூ டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரியில்  நாடாளுமன்றச்  சிறப்புக்  கூட்டமொன்று   கூட்டப்பட்டு, அதில் புதிய  தேர்தல்  தொகுதி  எல்லைகள் ஏற்கப்படும். புதிய   தேர்தல் தொகுதி   எல்லைகள்   மீதான   விசாரணை  சிலாங்கூரில்  மட்டும்தான் இன்னும்   நடக்கவில்லை. சிலாங்கூர்  மாநிலம் , தேர்தல் ஆணையத்தின்   தேர்தல் தொகுதிகளை திருத்தி அமைத்ததை செல்லாது என்று அறிவிக்கக் கோரி கடந்த 2016 ஆம்  வழக்கு தொடர்ந்தது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், கடந்த டிசம்பர்  7 ஆம் தேதி சிலாங்கூர் அரசு தொடுத்திருந்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்தது.ஆனால்,தொகுதி  சீரமைப்பு தொடர்பான  தேர்தல் ஆணை யத்தின்  விசாரணையை   நிறுத்தி  வைக்குமாறு அது   உத்தரவிட்டது. இப்போது   அந்தத்  தடையும்  அகன்று  விட்டது.

Read More: Malaysia Nanban News Paper on 20.12.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img