செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.தலைமைத்துவ ஆற்றலை வளர்த்த அலோர்காஜா தமிழ்ப்பள்ளி
செவ்வாய் 19 டிசம்பர் 2017 13:14:59

img

பெயர் : சுரேந்தர் குணாளன் /அலோர்காஜா தமிழ்ப்பள்ளி, மலாக்கா /  மலாயா பல்கலைக்கழகம் / இயற்பியல் துறை (3ஆம் ஆண்டு) 

மலாக்கா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுரேந்தர் குணாளன் தற்போது மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் (Physics) மூன்றாம் ஆண்டில் பயின்று  வரும் இவரின் ஆரம்பக் கல்வியை தொடக்கி வைத்த தமிழ்ப்பள்ளி அலோர்காஜா கெமுனிங் குழு தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றாலும் இறுதி நான்கு ஆண்டுக் கல்விக்கு தளம் அமைத்துக் கொடுத்தது அலோர்காஜா தமிழ்ப்பள்ளி என்பதைப் பெருமையாகக் கருதுவதாகவும் தெரி வித்துள்ளார். 

பெற்றோர் குணாளன் துளசி தம்பதியரின் தலைப்பிள்ளையான இவருக்கு கு.திவ்யா, கு.ஜீவிதா என இரு சகோதரிகளும் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளியில் பயிலும் காலத்தில் கிடைத்த கல்வி அனுபவமே  இடைநிலைப்பள்ளியின்  ஐந்து ஆண்டுக் கல்வியை இலகுவான  முறையில் பெறு வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியதால் ஸ்ரீ பெங்காலான் இடைநிலைப்பள்ளியில் மிகச் சிறந்த தேர்ச்சியினைப் பெற  முடிந்ததாக நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

மலாக்கா மெட்ரிகுலாசி (Kolaj matrikulasi melaka)  கல்லூரியில்  காலடி  எடுத்து  வைக்க எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழிப்பாடமும், தமிழ்  இலயக்கியப் பாடமும் பக்கபலமாக இருந்ததாகக் கூறிய இவருக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் (University malaya)  இயற்பியல் (Physics) துறையில்  பயிலும் வாய்ப்பும் கிடைத்ததாகக் கூறுகின்றார். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், பெற்றோர்களின் ஊக்குவிப்பும்  தன்னுடைய  இந்த உயரிய நிலைக்கு அஸ்தி வாரம் என்பதை வெளிப்படையாகவே  கூறுகின்றார்  சுரேந்தர் குணாளன். 

2003 ஆம் ஆண்டில்  அமலாக்கம் கண்ட அறிவியலையும்  கணிதத்தையும்  ஆங்கிலத்தில்  போதிக்கும் நடைமுறையின் வழி தனக்குக் கிடைத்த ஆங்கில மொழியின்  ஆற்றலே   இடைநிலைப்பள்ளி, மெட்ரிகுலேசன்  கல்லூரியில் மட்டுமின்றி தற்போது பல்கலைக்கழக கல்விக்கும் பெரும் துணை யாக இருந்து வருவதை  தெளிவுபடக் கூறுகின்றார்   சுரேந்தர் குணாளன். மேலும்  குறிப்பிட்ட  பாடங்களை ஆங்கிலத்தில் பயில்வதால் தமிழ்மொ ழிக்கு எவ்விதமான பாதகமும் வரப்போவதில்லை என்பதையும் பதிவு செய்துள்ளார். 

தமிழ்ப்பள்ளியில்  பயிலும் காலத்தில் தமக்குக் கிடைத்த தலைமைத்துவ வாய்ப்புகளின் வழியே சிறந்த  தலைமைத்துவ ஆற்றல்களைப் பெற்றிருப்ப தாகக்  கூறும் சுரேந்தர் குணாளன், தான் கற்று வரும் துறையில் முனைவர் கல்வியைத் தொடருவதே தனது லட்சியம் என்பதையும் உறுதியாகக் கூறு கின்றார். தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் நிச்சயமாக சோடை போவதில்லை என்பதை இவரின் அடைவு நிலையின் வழி அறிய முடிகின்றது. 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
img
விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி

எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு

மேலும்
img
பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை

அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img