ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

பொறுமைக்கும் எல்லையுண்டு.  புக்கிட் பெருந்தோங் தொழிலாளர்களின் 26 ஆண்டு போராட்டம்
திங்கள் 18 டிசம்பர் 2017 18:10:38

img

(ஆர்.குணா) உலு சிலாங்கூர், 

உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங் தோட் டம், 1991-ஆம் ஆண்டில்  பண்டார் புக்கிட் பெருந்தோங்  மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதன் தொழிலாளர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க வாக்குறுதி அளிக்கப் பட்டது. ஆனால், இன்று 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அத்தோ ட்டத்தின் 54 தொழிலாளர்கள் கேட்கும் கேள்விகள்: 1) எங்கள் வீடுகள் எங்கே 2) எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன வானது என்பதுதான். நேற்று அவர்கள் இங்கு மறியலில் ஈடுபட்டனர்.

புக்கிட் பெருந்தோங் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை இன்றும் இழுப்பறியாக இருப்பதைக் கண்டு 54 தொழிலாளர்கள் கொந்த ளித்துள்ளனர். நேற்று  தோட்ட நிறுவனத்தின் அலட்சியமான போக்கை எதிர்த்து பிஸ்ஆர்எம் சிவராஜன் தலைமையில் தொழிலாளர்கள் மறியல் நடத்தினர். 

தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று தோட்ட நிறுவனம் தந்த வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. வீட்டுடமை திட்டத்தை மேற்கொள்ள விருந்த துணை நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்ற கட்டுக் கதையினை கட்டவிழ்த்துவிட்டதில் உண்மையில்லை. உண்மையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் செழிப்பாகவும் செலுமையாகவும் இருக்கிறது. கைவிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்ட பகுதியினை தொழிலாளர்கள் பார்வையிட்டனர். அங்கே மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. தோட்டத்தின் குடியிருப்பு பகுதியில் அத்துமீறி  செம்பனை கன்றுகள் நட்டு வைக்கப்பட்டிருந்தது.

Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 18.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img