புதன் 21, நவம்பர் 2018  
img
img

 ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் சாதனை
செவ்வாய் 12 டிசம்பர் 2017 13:46:20

img

(எம்.கே.வள்ளுவன்)  ஜொகூர்பாரு,

உலக அளவில் தைவானில் நடைபெற்ற புத்தாக்கப் போட்டிகளில் ஜொகூர்பாரு ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப் பள்ளியின் இரு மாணவர்கள் இரு தங்கங்களை வென்று உலக அளவில் ஜாலான் யாஹ்யா  அவால் தமிழ்ப்பள்ளியின் பெயரை முத்திரை பதித்துள்ளனர். மாணவர்கள் இளவரசன் சுப்பிர மணியம் மற்றும் முகிலன்  கோவலன் ஆகியோர் வண்ண குருட்டுத் தன்மையை அறிந்துக் கொள்ளக்கூடிய கருவியை அறிமுகப்படுத்தி அதன் பயன் பாடு களையும் அறிஞர்களிடம் விளக்கி  அவர்களின் தீர்ப்பின் மூலம் தங்கப் பதக்கத்தை வென்றனர். 

அதேவேளை ஸ்ரீலங்கா நாட்டின் சிறப்பு மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தையும் இரு மாணவர்களும் வென்றுள்ளனர். கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் உலக நாடுகளிலிருந்து மொத்தம் 341 போட்டியாளர்கள்  பங்கு கொண்டதாக இந்த இரு மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கிய ஆசிரியை திருமதி லோகேஸ்வரி முருகன் தெரிவித்தார். உலக அரங்கில்  தமிழ்ப்பள்ளிகள் கால்பதித்து வருவது தமிழ்ப்பள்ளிகள் மீது சமூகத்தின் பார்வை பெருமைக் கொள்ள வைக்கும் என நம்பப்படுகின்றது. இதனிடையே இப்போட்டியில் ராமகிருஷ்ணா, ஜெஞ்சாரம், பூச்சோங் ஆகிய தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா தமிழ்ப்பள்ளி

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img