திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

13 மணிநேரம் மாட்டுப் பண்னையில் சித்ரவதை
திங்கள் 11 டிசம்பர் 2017 12:48:12

img

கோலாலம்பூர்,

கடத்தப்பட்டு 13 மணிநேரம் மாட்டுப் பண்ணையில் வைத்து கருப்பு துணியால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மாது ஜோதிமணி தாக்கப்பட்ட சம்பவம் அவருக்கு மறக்க முடியாத கசப்பான அனுபவமாக அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாது எஸ்.ஜோதிமணி அடை யாளம் தெரியாத மூன்று நபர்களால் கம்போங் ஜாவாவில் கடத்தப்பட்டார். மெர்சிடிஸ் பென்ஸ் ரகக் காரில் வந்த மூவரில் ஒருவர்  ஜோதிமணியிடம் பேசிய வாக்கில் அவரை காரில் இழுத்து தள்ளி கடத்திச் சென்ற காட்சிகள் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளன.

கடத்தப்பட்ட மாது பக்கத்திலுள்ள மாட்டு பண்ணைக்கு கருப்பு துணியால் கண்களை கட்டிய நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சுமார் 50 மீட்டர் அம்மாது தரையில் தர தரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாதின் அண்ணன் எஸ்.மணிமாறன் (வயது 50) தெரிவித்தார். என் தங்கையை கடத்தியவர்கள் இந்திய ஆடவர்கள்என்பது ரகசிய கேமராவின் காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. அவரை கடத்தியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றார்.

கடத்தப்பட்ட என் தங்கை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையிலும் முதுகிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அவரின் கை விரலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக எஸ்.மணிமாறன் தெரிவித்தார்.அம்மாதை கடத்திய கும்பல் அவரை கடத்தப்பட்ட இடத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் கடத்திய அதே நாள் இரவு 10.30 மணியளவில் விட்டுச் சென்றுள்ளது.

Read More: Malaysia Nanban News paper on11.12.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img