செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

லஞ்சாங் தமிழ்ப்பள்ளி விவகாரம்: மலேசிய நண்பன் செய்தியின் எதிரொலி
சனி 09 டிசம்பர் 2017 16:56:50

img

லஞ்சாங் (நடராஜன் பெருமாள்)

லஞ்சாங் தமிழ்ப்பள்ளியின் விவகாரம் குறித்து மலேசிய நண்பன் தொடர்ந்து செய்திகளையும் விவாதங் களையும் முன்வைத் ததன் பயனாக அப்பள்ளி 2018ஆம் ஆண்டு  முதல் செயல்பட உள்ளது. இந்தத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கு 11-12-2017 திங்கட்கிழமை கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் வருகை புரியவுள்ளார். லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை  என வட்டார இந்தியர்கள் குரல் எழுப்பியதன் பய னாக 71.6 மில்லியன் வெள்ளி செலவில் நவீன முறையில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது.

அக்காலக்கட்டத்தில் 2016ஆம் ஆண்டு மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் குத்தகை யாளருக்கும் பள்ளியின் மேலாளர் அற வாரியத்திற்கும் இடையில் ஏற்பட்ட தகராற்றினால் அது சாத்தியப்படவில்லை. இவ் விவகாரம் குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் தொடர்ந்து வெளி யிட்டு வந்த செய்தியின் காரணமாக நாடளவில் தமிழ்ப்பள்ளி, தமிழ் மொழி ஆர்வலர்களின் தொடர் நடவடிக்கையால் இப்பள்ளிக்கு விடிவு பிறந்தது. அதன் பயனாக வருகிற திங்கட்கிழமை கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் இப்பள்ளிக்கு வருகை புரியவுள்ளார்.

கல்வி அமைச்சிடம் இக்கட்ட டத்தை  வடிவமைத்து சிறப்பாக செய்து முடித்த பெர்தாமோ நிறுவனத்தின் இளம் இந்திய குத்தகையாளரான விஜேந்திரன், அரசாங்கம் பயன்படுத்துவதற்கு  ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறும். ஆகவே, பொது மக்கள் குறிப்பாக இந்தியர்கள் திரளாக வருகை தருமாறு  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அதேவேளையில், பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப் பினரும் லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஹாஜி சர்கார் சம்சூடின், துணை கல்வி அமைச்சர் ப.கமலநாதன், தெமர்லோ தொகுதி மஇகா தலைவர் டத்தோ அ.சிவலிங்கம், தமிழ்ப்பள்ளி, மொழி ஆர்வலர்கள் வருகை புரியவுள்ளதாக ஏற்பாட் டாளர் பெர்காமோ உரிமையாளர் விஜேந்திரன் கூறினார். 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை

மேலும்
img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img