திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

கம்போங் ஜாவா தொழிற்பேட்டையில் இந்தியப் பெண் கடத்தல்
சனி 09 டிசம்பர் 2017 12:23:37

img

கிள்ளான்,

வழக்கம் போல நேற்று காலை 8.00 மணிக்கு, கம்போங் ஜாவா, ஜாலான் டத்தோ செல்லதேவ னில் உள்ள தனது பணியிடம் சென்றடைந்த எஸ்.ஜோதிமணி என்ற பெண், பிறகு காலை 9.40 மணிக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே அடையாளம் தெரியாத ஆடவர்களால் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டப்பகலில் நிகழ்ந்த இச்சம்பவத்தினால் கம்போங் ஜாவா மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஜோதிமணி கடத்தப்பட்ட சம்பவம் தொழிற்சா லைக்கு வெளியே உள்ள ரகசிய கேமராவில் மிகவும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இக்காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்தாரும் போலீசாரும் அப்பெண்ணையும் கடத்தலில் ஈடுபட்ட  அந்த ஆடவர்களை தேடும் படலத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கே.இ.இ. 46 என்ற எண் பட்டையைக் கொண்ட வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் அவர் கடத்தப்பட்டதாக நேற்று காலை தொடங்கி வாட்ஸ் ஆப்பில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலுடன் அப்பெண் கடத்தப்பட்ட காணொளியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read More: Malaysia Nanban News Paper On 09.12.2017 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img