கோலாலம்பூர்,
அடுத்த ஆண்டு கல்வியாண்டு தொடங்கும் போது பள்ளி பேருந்து கட்டணம் உயர்த் தப்படுவதற்கு மலேசிய பள்ளி பேருந்து நடத்துனர் கள் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மக்களின் வாழ்க்கை செல வினம் உயர்ந்து கொண்டு இருக்கும் இவ்வேளையில் பள்ளி பேருந்து கட்டணம் உயர்த்தப்படு வது தங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று பெரும்பாலானவர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
நெகிரி செம்பிலான் சிரம்பானை சேர்ந்த வி. சரஸ்வதி கூறுகையில், தற்போது நாட்டின் பொருளாதார செலவினம் மக்களை அழுத்திக்கொண்டு இருக்கும் வேளையில் திடீரென்று பள்ளி பேருந்து கட்டண உயர்வுக்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதி வழங்கியது என்று கேள்வி எழுப்பினார். ஒரு வீட்டில் மூன்று நான்கு பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரி 250 வெள்ளி முதல் 350 வெள்ளி வரையில் செலவிடுவது என்பது மிகவும் சிரமத்தில் ஆழ்த்திவிடும் வேளையில் பேருந்து கட்டணத்தை 10 வெள்ளி முதல் 20 வெள்ளி வரையில் உயர்த்தப்படும் என்று மலேசிய பள்ளி பேருந்து நடத்துனர்கள் சங்கம் அறிவித்து இருப்பது தங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று ரந்தாவை சேர்ந்த வி. தேவி தெரிவித்தார்.
Read More: Malaysia nanban News Paper on 7.12.2017
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்