வெள்ளி 26, ஏப்ரல் 2019  
img
img

மாமியார்-கணவரின் சித்ரவதைக்கு ஆளான மலேசியப் பெண் மீட்பு.
செவ்வாய் 05 டிசம்பர் 2017 12:44:42

img

கோலாலம்பூர், டிச.5-

கணவர், மாமியாரின் இரக் கமற்ற செயலால் நாள் தோறும் அடி, உதை சித்ரவ தைக்கு ஆளாகி  சொல்லொண்ணா துயரத்தில்,  சித்ரவதை என்னும் படுகுழியில் தள்ளப்பட்டு, ரண வேதனைக்கு ஆளான மலேசியப் பெண் தேவசூரியா, தமிழக போலீசாரால் மீட்கப்பட்டார். தமிழகத்தில் தாம் நம்பியவரை  நாடி சென்று, அங்கே தனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவிற்கு அந்தப் பெண் ஆளானார்.

கோலாலம்பூரைச் சேர்ந்த தேவசூரியா சுப்பிரமணியம் என தன்னை அடையாளம் கூறிக் கொண்ட அந்த மாது தன் நான்கு வயது மகனுடன் நாடு திரும்ப இருப்பதாக தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிபுலி போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கூறினார். அந்தப் பெண்ணை நாங்கள் அவரை ராமேஸ்வரத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம். அங்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. அவருடைய விமான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என்று  சதீஷ்குமார் தெரிவித்தார்.

தேவசூரியா உதவி கோரி விரக்தியில் அழுது கொண்டிருப்பதை  காட்டும் ஒரு வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவிய போது அவருடைய அவல நிலை வெளியே தெரிய வந்தது. தன் மாமியாரும் கணவரும் சேர்ந்து தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும் தன்னை உடனடியாக காப்பாற்றி மலேசியாவிற்கு அனுப்பி வைக்குமாறு அந்தப் பெண் அழுத காட்சி, பலரின் இதயத்தை உறைய வைத்தது. தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என தான் அஞ்சுவதாகவும்  அந்தமாது வீடியோவில் கூறியிருந்தார்.

Read More: Malaysia Nanban News paper on 12.5.2017

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாநில அரசியல் விவகாரங்களில் ஜொகூர் சுல்தான் தலையிடக்கூடாது

ஒப்புக் கொண்டு மாநில அரசாங்க விவகாரங்களில்

மேலும்
img
மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீட்டில் இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள்?

இந்த இடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பின்படி

மேலும்
img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img