புதன் 14, நவம்பர் 2018  
img
img

திருட்டுப் பயலே 2 - விமர்சனம்
சனி 02 டிசம்பர் 2017 17:58:10

img
தங்கமுகைதீன்.
 
வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றதோ அதே அளவு தீமைகளும் நிறைந்திருக்கிறது. தொழில் நுட்பத்தை கையா ளுபவர்களின் எண்ணங்களைப் பொறுத்தே அவர்களுக்கு நன்மையும் அல்லது தீமையும் கிடைக்கும். திருட்டுபயலே 2 படத்தின் இயக்குநர் சுசிகணேசன், பெண்கள் பேஜ்புக்கை கையாளுவதால் அவர்களுக்கு வரும் தீமைகளை விரிவாக விளக்கி இருக்கிறார். வேற்று ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனித்தி ருக்கும்போது, மூன்றாது ஆளாக அங்கே சைததான் இருப்பான் என்ற சொல் எவ்வளவு உண்மை என்பதை  இயக்குநர் விளங்கினாரோ இல்லையோ, ஆனால் இப்படத்தின் மூலம் அதை மற்றவர்களுக்கு சைத்தான் இருப்பான் என்பதை விளங்கி படமெடுத்துள்ளார். பாராட்டுகள் சுசிகணேசன். 
 
பாபிசிம்ஹா நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பதால் அடிக்கடி மாற்றுதல் ஆகுகிறார். அவருக்கு முக்கிய நபர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் வேலை கொடுக்கப்படுகிறது. ஒருமுறை அமைச்சர் எம்.எஸ்.பாஸ்கரின் போனை ஒட்டு கேட்க நேரிடுகிறது. லஞ்சப்பணம் ரூ.20 கோடியை கைமாற்றுவது எப்படி என்பதைப்பற்றி எம்.எஸ்.பாஸ்கர் பேசுவதை பாபிசிம்ஹா ஒட்டு கேட்கிறார். அந்த இருபது கோடியை தானே அடைய வேண்டும் என்று திட்டம் போடுகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் பாபிசிம்ஹா. 
 
அதை போலீசார்களுக்குத் தெரியாமலேயே போலீஸ் மூலமே ரூ.20 கோடியை தட்டிச் செல்கிறார் பாபிசிம்ஹா. விரலால் தேனைத் தொட்டு சப்பி சாப்பிட ஆரம்பித்தவன், பிறகு உள்ளங்கை வரை தேனை அள்ளி நக்கி சாப்பிடுவான் என்பது போல, ஒரு முறை திருட ஆரம்பித்த பாபிசிம்ஹா அடுத்த டுத்து போனில் பேசும் ரவுடிகளின் பேச்சையும் ஒட்டுக்கேட்டு பல கோடிகள் சம்பாதிக்க ஆசைபடுகிறார். இத்துடன் விடவில்லை பாபிசிம்ஹா. தனது மூத்த அதிகாரிகளின் போனையும் ஒட்டுக் கேட்டு அவர்களின் அந்தரங்க விஷயங்களையும் ஆடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். இப்படி படம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
அடுத்து, பாபிசிம்ஹாவின் மனைவி அமலாபால் தனியாக வீட்டில் இருப்பதால் பேஸ்புக்கில் தனது நேரத்தை கழிக்கிறார். பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்களை தேர்வு செய்து கொண்டு இருக்கிறார். அப்படி நண்பராக கிடைத்தவர்தான் பிரசன்னா. இதுவரை நேரில் பார்க்காத இருவரும் பேஸ்புக் மூலம் ஒருவருக்கொருவர் பேசி நண்பர்களாக மாறுகிறார்கள். பிரசன்னாவும் இதுபோல் பேஸ்புக்கில் பல பெண்களை தொடர்பு கொண்டு அவர்களது அந்த ரங்கங்களை தெரிந்து கொண்டு வயதான பெண்களிடம் பணமும், அழகான பெண்களை தனது ஆசைக்கு இணங்க வைப்பதும் அவரது வேலையாக இருக்கிறது. இதில் மாட்டிக் கொண்டவர்தான் அமலாபால்.
 
அவரது பாத்ரூம் படங்களை ரகசிய கேமிரா மூலம் வீடியோ எடுத்துக் கொண்டு அமலாபாலை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்துகிறார். அவர் பிரசன்னாவின் ஆசைக்கு இணங்கினாரா இல்லையா என்பது உச்சக்கட்ட காட்சியாகும். இதில் பெண்களுக்கு இணையதளத்தின் மூலம் வரும் இன்னல்களை கனகச்சிதமாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். இதைப்பார்த்த பிறகாவது இனி பெண்கள் பேஸ்புக்கிற்கு குட்பை சொல்லுவார்கள் என்று எதிர்பார்ப்போமாக.
 
இதில் பாபிசிம்ஹாவை உயர் போலீஸ் அதிகாரிகள் மிரட்டுவதும், அந்த உயர் அதிகாரிகளின் அந்தரங்கத்தை பாபிசிம்ஹா போட்டு உடைத்து அதி காரிகளை மிரளவைப்பதும் ரசிக்கும்படியான காட்சிகள். தனது அந்தரங்க வீடியோ காட்சிகள் தனது கணவருக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக பிரசன்னாவிடம் அமலாபால் கெஞ்சுவதும், அமலாபாலின் அந்தரங்க வீடியோ காட்சியை பாபிசிம்ஹா பார்த்தும்கூட, அதை அமலாபாலுக்கு தெரியாமல் பாபிசிம்ஹா மறைப்பதும் உள்ளத்தை தொடும்படியான நடிப்பால் இருவரும் பிரகாசிக்கிறார்கள்.
 
பிரசன்னா அலட்டிக் கொள்ளாத வில்லன், படித்த இளைஞனாக வருகிறார். பக்குவமாக பேசி பெண்களை மயக்குவதிலும் பிறகு அவர்களை மிரட்டுவதி லும் கைதேர்ந்த கள்ளன். அடிவாங்கிக் கொண்டே சிரிக்கும் நடிப்பு அபாரம். பிரசன்னா அடிவாங்கும்போது வில்லனாக ரசிகர்களுக்கு தெரிகிறார். சிரிக்கும்போது நாயகனாக பிரகாசிக்கிறார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
img
2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100

மேலும்
img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img