செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

4-வது நாளாக இருட்டில் தவிக்கும் குமரிமாவட்டம்; விரைவில் சீரமைக்கப்படும்
சனி 02 டிசம்பர் 2017 17:51:03

img
சென்னை
 
கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒகி புயலால்ஆயிரம் மின்கம்பங்களும், 100க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக 1,500 மீட்டர் உயர் மின் அழுத்த பாதையும், 2,400 மீட்டர் குறைந்த மின் அழுத்த பாதையும் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பங்களை மாற்றி, மின்பாதையை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று முதல் அவர்கள் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற நகரங்களில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
இன்று 4-வது நாள் ஆன பின்பும் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் மின் விநியோகம் முழுமையாக சீரடையவில்லை. எங்குமே மின் விநியோகம் நடக்கவில்லை. இதனால் 29-ந்தேதி இருளில் மூழ்கிய குமரி மாவட்டம் இன்று 4-வது நாளாக இருட்டில் தவிக்கிறது. மின்சார தட்டுப்பாடால் மாவட்டத்தில் எங்குமே குடிநீர் விநியோகம் நடை பெறவில்லை. மோட்டார் இயங்கினால் மட்டுமே தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்று குடிநீர் வாரிய ஊழியர்கள் கூறுகிறார்கள். பல இடங்களில் மக்கள் மொட்டை மாடியில் இருந்து விழும் மழை நீரை சேமித்து வீட்டு தேவைகளுக்கு பயன்ப டுத்துகிறார்கள்.   ஆனால்  குடிக்க தண்ணீரின்றி தவிக்கிறார்கள். 
 
ஏ.டி.எம். மையங்களும் இயங்கவில்லை. வெளி இடங்களில் இருந்து உதவிக்கு வாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்பதற்கு கூட செல்போன்கள் பயன்படவில்லை. அவையும் மின்சாரம் இல்லாததால் செயல்படவில்லை. குமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மாவட்டத்தில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.
 
அவர்களிடம் மாவட்டத்தில் மின் விநியோகத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் மின்விநியோகம் சீராகுமென்று அமைச்சர்கள் கூறி உள்ளனர்.இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூரில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், சேலம் மாநகரில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாலங்கள் அனைத்து விரைவில் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார். அத்துடன் கன்னியாகுமரியில் மின்கம்பங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரையில் அங்கு மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img