திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு
வியாழன் 30 நவம்பர் 2017 17:21:55

img

தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்த அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

‘‘தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள, குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 170 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தீவிரமடைந்து "ஒகி" புயலாகவலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தென் தமிழக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களை உரிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டுசென்று, நிவாரண முகாம்கள், பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கிடவும் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும், போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டி.கே.இராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு குமார் ஜெயந்த், திருநெல்வேலிமாவட்டத்திற்கு ராஜேந்திரகுமார்,ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பி.சந்தரமோகன், ஆகிய கண்காணிப்பு அலுவலர்களையும், அந்தந்த மாவட்ட அமைச்சர்களையும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரையும் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்.

மழைநீர் புகாத வண்ணம் தெருவோர மின் பகிர்மான பெட்டிகளை நல்ல முறையில் பராமரித்து, அவற்றை உயரத்தில் அமைக்க வேண்டும் எனவும், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை விரைவாக வெளியேற்ற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பகுதி களில் சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம்களை நடத்தி, தொற்று நோய்கள் ஏற்படாத வண்ணம் அப்பகுதிகளை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள 70 நபர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது. மேலும், 60 நபர்கள் அடங்கிய இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும் விரைந்துள்ளன. பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து மின்கம்பங்களின் மீது விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட மின் தடையினை சீரமைக்கும் பணிக்காக, மதுரை மின் பகிர்மான அலகிலிருந்து பணியாளர்கள் தகுந்த உபகரணங்களுடன்விரைந்துள்ளனர். இப்பணிகளை துரிதப்படுத்த மின் பகிர்மான கழகத்தின் இயக்குநர், மின் உற்பத்தி கழகத்தின் இயக்குநரும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட விரைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உடனடியாக தக்க நிவாரணம் கிடைத்திட தமிழ்நாடு அரசுஅனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சம்பவ இடத்தில் பணிகளை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளதால், மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img