img
img

மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் என ஒன்று இருக்கிறதா? 
வியாழன் 30 நவம்பர் 2017 14:27:02

img

(பி.ஏ.கந்தையா) தெலுக் இந்தான்,

மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் என ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா அல்லது தூங்கிக்கொண்டிருக்கிறதா என்று பினாங்கு பயனீட்டா ளர் சங்க கல்விப் பிரிவின் அதிகாரி என்.வி.சுபராவ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனித னைக் கடித்தது போன்று நம் நாட்டில் திரையிடப்படும் ஒரு சில தமிழ்ப்படங்களில் முன்பு இலைமறை காயாகக் காட்டப்பட்ட ஆபாச காட்சிகளும், நகைச்சுவை என்ற பெயரில் பேசப்படும் இரட்டை அர்த்த  வசனங்களும் பாடல்களும் தணிக்கை செய்யா மல் நேரடியாகக் காட்டப்படுகின்றன.

உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தில் எந்தவிதமான தணிக்கையும் செய்யாமல் அப்படியே திரையிடப் பட்டுள்ளது. இதில் பேசப்படும் வசனங்கள் சிறுவர் சிறுமியர் கூட புரிந்துகொள்ளும் அளவில் உள்ளன. இத்திரைப்படத்தில் நடித்த கதாநாயகி ஒரு பேட்டியில், இத்திரைப்படம் பெரியவர்களுக்கு மட்டுமே சிறுவர்களுக்கு அல்ல. பார்க்க விரும்பாதவர்கள் பார்க்க வேண்டாம் என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது திமிராகப் பேசியுள்ளார்.

இதுபோன்று பல ஆபாச திரைப்படங்களை அடையாளம் காட்ட முடியும். தனியார் தொலைக்காட்சியின் பெரும்பாலான தமிழ் நாடகங்களில் பெண்கள் பலே கில்லாடி வில்லிகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

Read More: Malaysia nanban News Paper on 30.11.207

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img