img
img

``நான் பாத்துக்கறேன்...”: வடகொரிய அச்சுறுத்தலுக்கு ட்ரம்ப்பின் அசால்ட் ரிப்ளை!
புதன் 29 நவம்பர் 2017 15:56:53

img

வடகொரியா நேற்று இரவு நடத்திய ஏவுகணைச் சோதனைகுறித்து அமெரிக்க அதிபர் அளித்துள்ள பேட்டியில், “நான் பாத்துக்கறேன்...” எனப் பதிலளித்தி ருக்கிறார்.

உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நா-வின் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணைச் சோதனைகள், அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பானுக்கும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இந்த விஷயத்தில் கடும் மோதல் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஆகியோர் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று வடகொரியா மீண்டுமொரு ஏவுகணையைப் பரிசோதித்துப் பார்த்துள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் இந்த ஏவுகணை வீசப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும் இதை உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் அளித்துள்ள பேட்டியில், “தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடகவே வடகொரியா உள்ளது. அதை, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் கவனித்துவருகின்றன. இது போன்றதொரு இக்கட்டான நிலைமையை அமெரிக்க துணிந்து எதிர்கொள்ளும். தொடர்ந்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளித்துவரும் வட கொரியாவை இனி நான் பார்த்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img