வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறுபவர்களுக்கு வெ.20 ஆயிரம் அபராதம் 
செவ்வாய் 28 நவம்பர் 2017 11:28:40

img

பொதுமக்களுக்கு வழங்கப் படும் சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தின் பிரிவு 299-இன் கீழ் தேசியப் பதிவு இலாகாவிற்கு புதிய அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. இச்சட்டம் 1957-இல் முதல் முறையாக நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 

பிரிவு 299-இன் கீழ் செய்யப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்களில்:

* புதிதாகப் பிறந்த சிசுக்களின் பதிவை எளிதாக்குவது;

* பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை தளர்த்துவது;

* ஒருவரின் உடலை கண்டுபிடிக்க இயலாத பட்சத்தில் அனுமானிக்கப்பட்ட இறப்புச் சான்றிதழை பெறுவது ஆகியன அவற்றுள் அடங்கும்.

இந்த மூன்று அம்சங்களும் மிகவும் ஆழமாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. இச்சட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட நாள் முதல் இது திருத்தப்படவே இல்லை என்பதை தேசியப் பதிவு இலாகா சுட்டிக்காட்டியுள்ளது. 

தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் இனி பிறப்பு,  இறப்புகளை தீபகற்ப மலேசியாவில் உள்ள எந்த பதிவு இலாகாவிலும் பதிவு செய்ய முடியும். முந்தைய சட்டத்தின் கீழ், பிறப்பு, இறப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள பதிவு இலாகாவில்தான் மக்கள் பதிவு செய்ய முடியும் என்ற கட்டாயம் இருந்தது.

புதிதாகப் பிறந்த தங்கள் குழந்தைகளை பதிவு செய்வதற்கு பெற்றோர்களுக்கு இதற்கு முன்பு 14 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அந்த 14 நாட்களுக்குப் பிறகு அது காலதாமதமான பதிவாகக் கருதப்படும். எனினும், புதிய சட்டத்தின் கீழ் பெற்றோர்களுக்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.

Read More: Malaysia Nanban News paper on 28.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img