வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

`மக்களிடம் சென்றாலே, புகார் மனுக்கள்தான்!' - ஜெ.தீபா ஆதங்கம்
திங்கள் 27 நவம்பர் 2017 17:44:01

img

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க என பிரதான போட்டியாளர்களோடு தனித்துக் களம் காண்கிறார் ஜெ.தீபா. ' தொகுதி முழுக்க ஏரா ளமான பிரச்னைகள் இருக்கின்றன. இப்போதே மக்கள் என்னிடம் புகார் மனுக்களைக் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்' என்கிறார் இயல்பாக.

அ.தி.மு.க சார்பில் ஆர்.கே.நகரில் களம் இறங்கும் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. தி.மு.க சார்பில் ஏற்கனவே களத்தில் நின்ற மருது கணேஷுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி கள் ஆதரவளித்துள்ளன. இரட்டை இலைக்கு எதிராக டி.டி.வி.தினகரனும் போட்டியிடுகிறார். இந்நிலையில், ' ஆர்.கே.நகர் தேர்தலில் கட்டாயம் போட்டி யிடுவேன்' என அறிவித்திருக்கிறார் ஜெ.தீபா.

அவரிடம் பேசினோம். “ ஆர்.கே.நகரில் ஏற்கனவே தீவிரமாக பிரசாரம் செய்திருக்கிறேன். அதேபோல், இந்தமுறையும் தீவிர பிரசாரம் செய்வேன். ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் என்னிடம் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். அண்மையில் பெய்த மழையால் அங்கு சாலைகள் மோசமான நிலையில் இருக்கின்றன. அந்தநேரத்தில், நான் ஊரில் இல்லை. அதனால் என்னுடைய பேரவைத் தொண்டர்கள் சிலர் அங்கு சென்று மக்களுக்கு உதவினர். இதுபோன்று ஏராளமான பிரச்னைகள் அங்கு நிலவுகிறது. அனைத்தையும் சரி செய்வேன்" என்றார் உறுதியாக.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img