வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

யோகேஸ்வரனின் மற்றொரு நூல் ஒன்பது மாதங்களில் அதிசயம்.
திங்கள் 27 நவம்பர் 2017 12:15:35

img

கோலாலம்பூர்

மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவரான யோகேஸ்வரன் தமிழ்ச்செல்வம், 1995 ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், மலி ண்டோ, தற்போது ஏர் ஆசியா என வான் போக்குவரத்துத் துறையில் தன்னை இணைத்துக் கொண்டவர். தற்போது  விமானிகளுக்கான  ஏ330-200 மற்றும் பி737-800 முதலிய விமானங்களின்  சிமுலேட்டர் பொறியியல் பயிற்சிகளை வழங்கு பவராக பணியாற்றி வருகிறார். அதேநேரத்தில் பகுதி நேர மாணவராக ஆசியா இ பல் கலைக்கழகத்தில் நிர்வாகத் துறையில் 2 ஆண்டு காலம் பயின்று மிகச்சிறந்த மதிப் பெண்களை பெற்றுள்ளார்.

தனது சாதனைக்கான அடைவு நிலையை அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக் கழகத்தில் கல்வி நிர்வாகத்தில் கல்வி பயின்று வருகிறார். கல்வி முறையில் ஆக்கப்பூர்வமான ஆளுமை என்ற தலைப்பில் ஓர் ஆய்வையும் மேற்கொண்டு வரும் யோகேஸ்வரன், தனது ஆய்வுப்பணிகளில் ஒரு பகுதி யாக தமிழ்ப்பள்ளி மாணவர்க ளுக்கு நல்லதொரு தன் முனைப்பு உரைகளையும் நிகழ்த்தி வருகிறார்.

புகைப்படக்கலையையும் பயின்று வரும் யோகேஸ்வரன் தனது பயணத்தின் ஒரு பகுதியாக நூல்களை எழுதுவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். வான் போக்குவரத்து துறையில் தாம் பெற்ற அனுபவத்தை மையமாக கொண்டு காதல் என்பது வானில் பறக்கும் போது" எனும் நூலையும் யோகேஸ்வரன் எழு தியுள்ளார். 

சொந்தமாக  தன் முனைப்பு மேற்கோள்களை கொண்ட ஒரு தன்முனைப்பு நூலையும் எழுதியுள்ளார். தற்போது ஒன்பது மாதங்களில் அதிசயம்" எனும் ஒரு வித்தியாசமான நூலை எழுதியிருக்கிறார். மகளிரின் ஆளுமை, பொறுப் புணர்வு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட நிலையில் அவர்களுக்கு இருக்கக்கூ டிய  சிறப்பு குண இயல்புகளையும்  அவர்க ளின் தனித்துவமான ஆற்றலை யும் இந்நூல் நன்கு விளக்குகிறது.

 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
img
விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி

எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு

மேலும்
img
பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை

அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்

மேலும்
img
ரஷ்ய அறிவியல், புத்தாக்கப் போட்டியில் மலேசியா சாதனை

ரஷ்ய ஆய்வாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img