வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

பெற்றோர் கண்டித்ததால் 9 ஆவது மாடியிலிருந்து  குதித்து தர்கொலை செய்த 8 வயது சங்கமித்ரா
ஞாயிறு 26 நவம்பர் 2017 13:36:04

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு, 

தன் தாயார் சத்தம் போட்டதால் 8 வயது இந்திய சிறுமி  9 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மாண்டதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற அச்சம்பவத்தில் தாமான்  தம்போய்  இண்டா  2, மாவார் 3 இல் உள்ள சொகுசு அடுக்கு மாடி வீட்டின் அறையொன்றிலிலுள்ள  ஜன்னல் வழியாக கீழே குதித்து  மாண்டவர் சங்கமித்ரா ஸ்ரீ தரன்  என ஜொகூர்  பாரு வட பகுதி மாவட்ட  போலீஸ்   தலைவர் மூத்த  உதவிக் கமிஷனர்  முகமட் தாயிப்  அமாட்  நேற்று தெரிவித்தார். 

சம்பவம் நடப்பதற்கு முன்னர் வீட்டில் எஸ்.சங்கமித்ரா தன் 11 வயதுடைய இரட்டைச் சகோதரர்களுடன் குறும்புத்தனத்துடன் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட அவர்களின் வளர்ப்புத் தந்தை சங்கமித்ராவை கண்டித்துள்ளார். தன் வளர்ப்புத் தந்தையின் கண்டிப்பை ஏற்க முடியாமல் அழுதவாறே தன் தாயாரிடம் சென்று  சிறுமி கூறியிருக்கிறார். 

எனினும் தாயாரும் சங்கமித்ராவை  கண்டித்ததால் சங்கமித்ரா படுக்கையறைக்கு சென்றதோடு  அறைக்கதவை  பூட்டிக் கொண்டார். அதன் பின்  சிறுமி சங்கமித்ரா மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. சிறுமியின் தாயார் சங்கமித்ராவை அடித்ததாக கூறப்ப டுவதை  நிராகரிக்காத  முகமட் தாயிட் அமாட்  எனினும்  சிறுமியின்  மரணத்தில் சூது ஏதும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

Read More: Malaysia nanban News Paper on 26.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img