வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை டிடிவி தினகரன் ஆவேசம்
வியாழன் 23 நவம்பர் 2017 16:47:04

img

சென்னை

இன்று இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ள தாகத் தகவல்கள் வெளியானது.

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனி சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் 83 பக்கங்கள் கொண்ட இறுதி உத்தரவை தேர்தல் ஆணையம் அதிகார பூர்வ உத்தரவை பிறப்பித்து உள்ளது. இது குறித்து சேலத்தில் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை.122 எம்எல்ஏக்கள், 37 எம்.பி.க்கள் ஆதரவுடன் இருந்தபோது இரட்டை இலையை முடக்கி யது ஏன்? 
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளோம். 

குஜராத் மாநிலத்தில் தலைமை செயலாளராக இருந்தவர் தலைமை தேர்தல் ஆணையர். மத்திய அரசின் விருப்பப்படியே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமிக்கு சட்டப்பேரவையில் அறுதி பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்போம் இவ்வாறு அவர் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img