ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

பொதுத் தேர்தலை தவிர்ப்பதா? நஜீப் அத்து மீற மாட்டார்
திங்கள் 19 செப்டம்பர் 2016 15:30:50

img

தேசிய பாதுகாப்பு மன்ற சட்டத்தை பயன்படுத்தி பொதுத் தேர்தலை நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தவிர்ப்பார் என்று அவர் மீது அபாண்டமான பழியினை சுமத்த வேண்டாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். எக்காரணத்தைக் கொண்டும் பிரதமர் அத்துமீற மாட்டார் என்பது எங்களின் நம்பிக்கையாகும். தேசிய பாதுகாப்பு மன்ற சட்டத்தை அத்துமீறி பிரயோகித்தால் அதன் விளைவுகள் அனர்த்தம் என்பதனை இவர் நன்கு அறிவர். சிறு சிறு பகுதிகளை மட்டுமே பாதுகாப்பு பகுதியாக பிரகடனப்படுத்த முடியும் என்று இச்சட்டம் கூறுகிறது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இப்போதைய மக்கள் அரசியல் ரீதியில் விழிப்புணர்வும் தெளிந்த அறிவும் கொண்டவர்கள். பொதுத் தேர்தலை தவிர்க்கும் வண்ணம் நடப்பு பிரதமர் நடந்து கொள்வாரேயானால் அது ஒரு தெளிவான அதிகார துஷ்பிரயோகமாகும். அந்த மாதிரியான வேளையில் மக்கள் மட்டுமல்லாது சிவில் உரிமை போராட்டவாதிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை பொங்கி எழும். பிரதமர் நஜீப் நிச்சயமாக இவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்று தன்னால் நிச்சயமாக கூற முடியும் என்கிறார் யுனிவர்சிட்டி மலேசியா சரவாக் பல்கலைக்கழகத்தின் கல்விமான் ஜெனிலி அமிர். ஒட்டு மொத்தமாக நாட்டையே பாதுகாப்பு பகுதியாக பிரகடனம் செய்வதற்கு தேசிய பாதுகாப்பு மன்ற சட்டத்தில் இடமில்லை என பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அவாங் அஸ்மான் அவாங் திட்டவட்டமாக சுட்டிக் காட்டியுள்ளார். மருட்டலுக்கு உட்பட்டுள்ள சிறு பகுதிகளை பாதுகாப்பு பகுதிகளாக பிரகடனப்படுத்துவதற்கு சட்டம் அனுமதிக்கிறது. பிரதமரின் பரிந்துரையின் பேரில்தான் மாமன்னர் அவசர காலத்தை பிரகடன செய்ய இயலும். உலக மயமான ஜனநாயக உலகில் அனைவரின் பார்வை மலேசியா மீது உள்ளது. பொதுத் தேர்தலை தவிர்ப்பதற்கு பிரதமர் அவசர காலத்தை பிரகடனப்படுத்துவாரேயானால் உலகமே நம் பிரதமரை எதிர்மறையாக பார்க்கும் என்று நினைவுப்படுத்துகிறார் இணைப்பேராசிரியர் அவாங் அஸ்மான். அடுத்த பொதுத் தேர்தல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அஞ்சத் தேவையில்லை. அண்மைய தேர்தல் ஆணையத்தின் உத்தேசத் திட்டம் தேசிய முன்னணிக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img