திங்கள் 24, ஜூன் 2019  
img
img

ஜெயலலிதாவுக்கான பூஜையைக்கூட நடத்தவிடவில்லை! போலீஸார்மீது வெற்றிவேல் தாக்கு
புதன் 22 நவம்பர் 2017 16:07:09

img

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதாநிலையம் இல்லத்தை தினகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். 

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுதினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இந்தநிலையில், ஜெயலலிதா இல்லத்தில் பூஜை நடத்த புரோகிதர்களுடன் தினகரன் ஆதரவாளர்கள் சென்றனர். ஆனால், இந்த தகவல் முன்கூட்டியே தெரிந்ததை அடுத்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டனர். 

இதையடுத்து, புரோகிதர்களுடன் போயஸ் கார்டன் இல்லத்துக்கு தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்டோர் வந்தனர். அவர்களை வேதாநிலையம் இல்லத்துக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால், அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் மற்றும் கலைராஜன் ஆகியோர் கூறுகையில், ‘ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் மாதந்தோறும் பூஜை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த மாதம் அந்த பூஜையை நடத்த போலீஸார் அனுமதிக்கவில்லை.

வருமான வரித்துறை சோதனை தங்கள் கையில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கூறியது. ஆனால், இன்றைய நிலவரங்களைப் பார்க்கும்போது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படியே போலீஸார் எங்களை போயஸ் கார்டன் இல்லத்துக்குள் அனுமதிக்கவில்லை. பூஜை நடத்துவதற்காக புரோகிதர்களை மட்டுமாவது வீட்டுக்குள் அனுமதிக்கக் கோரினோம். ஆனால், அந்த கோரிக்கையையும் போலீஸார் நிராகரித்துவிட்டனர்’ என்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img