ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

தந்தை 3 பிள்ளைகள்,தூக்கில் தொங்கினர்
செவ்வாய் 21 நவம்பர் 2017 12:16:20

img

( நா. மணிராஜா) 

சுங்கைப்பட்டாணி,

இந்திய ஆடவர் தனது 3 பிள்ளைகளுடன் தூக்கில் தொங்கி, உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இந்த வட்டாரத்தை அதிர்ச்சியில் உறையவைத்தது. 48 வயதுடைய அந்த ஆடவரின் மனைவி கடந்த ஜனவரி மாதம் படுக்கையறையில் தூக்கில் தொங்கி உயிரைவிட்டதைத் தொடர்ந்து அடுத்த பத்து மாதங்களில் அக்குடும்பத்தில் மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்து இருப்பது, உறவினரை  நிலைகுலையச் செய்துள்ளது.

அந்த நால்வரும் இங்கு பெர்டானா ஹைட்ஸில் உள்ள தங்கள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது நேற்று பிற்பகலில் தெரியவந்தது.  48 வயதுடைய சிவராவ் த/பெ கிருஷ்ணன், அவரின் இரண்டு மகன்களான  ரகுராவ் (வயது 6), சாஸ்மின்ராவ் (வயது 5), ஒரே மகளான யமுனா (வயது 8) ஆகியோரே இறந்தவர்களாவர் என்று போலீசார் அடையாளம் கூறினர். அந்த நால்வரும் வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

அதே படுக்கை அறையில்தான் சிவராவின் துணைவியார் காமினி (வயது 38) இவ்வாண்டு  ஜனவரி மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சிவராவும் அவரின் மூன்று பிள்ளைகளும் இறந்து கிடப்பது பிற்பகல் 2 மணியளவில்தான் தெரியவந்தது. அவர்கள் 12 மணி நேரத்திற்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகின்றனர்.

Read More: Malaysia Nanban News paper on 21.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img