புதன் 14, நவம்பர் 2018  
img
img

பினாங்கு வெள்ளத்தில் உடைமைகளை இழந்து இந்தியர்கள் பரிதவிப்பு.
புதன் 15 நவம்பர் 2017 17:03:18

img

(சுகுணா  முனியாண்டி-பினாங்கு)

பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட  வரலாறு காணாத வெள்ளத்தில் உடைமைகளை இழந்து இந்தியர்கள் பரிதவித்து  வருகின்றனர். தங்களின் இன்னலை மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம் கண்டு கொள்ளாதது தங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருவதாக அவர்கள் குமுறினர். எங்களுக்கு மாநில அரசாங்கமோ அல்லது மத்திய அரசாங்கமோ உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரிசி, பருப்பு படுக்க மெத்தையும்   எங்களுக்கு வயிற்று பசியையும்.   தூக்கத்தையும்  மட்டுமே போக்க முடியும். நாங்கள் இழந்த உடைமைகள், ஆவணங்களை எப்படி பெறுவது? யார் உதவியை நாடுவோம்? எங்களுக்கு உதவ முன் வாருங்கள் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜூரு,  தாமான் மாங்கா குடியிருப்பு மக்கள் குமுறினர்.

இன்று மழை வருமா நாளை வெள்ளம் வருமா என்று ஒவ்வொரு நாளும் அச்சத்தில் மூழ்கியிருக்கும் நாங்கள் இம்முறை ஒட்டுமொத்த உடைமை களையும் இழந்தோம். மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு உதவி செய்வதற்காக  இரு அரசாங்கங்களின் நடவடிக்கைதான் என்ன என்று ஜூரு குடியிருப்பு குடும்ப மாதுவான சந்தன மாலா (வயது 51)  கேள்வியெழுப்பினார்.இரண்டு வருடங்களாக இப்பகுதியில் வசித்து வருகின்றோம். இது போன்ற கடுமையான வெள்ளம் ஏற்பட்டது  இதுவே முதல் முறையாகும். இதனால்  8,000 வெள்ளி நஷ்டமடைந்துள்ளதாக அவர் கூறினார். 

Read More: Malaysia Nanban News Paper on 15.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img