ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’
திங்கள் 13 நவம்பர் 2017 12:13:16

img
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப் படுகிறது.
 
தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். வேணுகோபால் மற்றும் அமைச்சர் கே. பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
 
இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர் எஸ். எஸ். ஸ்டேன்லி மற்றும் சிங்கம் புலி, பிளாக் பாண்டி, ஏ. ஆர். தீனதயாளன், முத்துராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர். முன்னாள் முதல்வர்கள் வி.என்.ஜானகி, ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்கான உருவ ஒற்றுமையுள்ள நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
 
'காமராஜ்' திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார். படத்தொகுப்பு எஸ்.பி.அகமது, ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குகிறார்.   
 
புரட்சித்  தலைவர் எம்ஜிஆரின் திரைப்படங்கள் துவக்க நாளன்றே, அனைத்து ஏரியாக்களும் விற்பனையாவது வழக்கம். அந்த மரபின் அடையாளமாக ஆனந்தா பிக்சர்ஸ் உரிமையாளர்  சுரேஷ் ஒரு தியேட்டருக்கான விநியோக உரிமையை பெற்றுக் கொண்டார். இத்திரைப்படம், உலகெங்கிலுமுள்ள தமிழர்களை சென்றடைய எம்ஜிஆரின் தீவிர பக்தர்களுக்கு அந்தந்த பகுதி திரையரங்குகளில் திரையிட விநியோக உரிமை வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் திட்டமிட்டுள்ளது.
 
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி எம்ஜிஆரின் பிறந்த நாளான வரும் ஜனவரி 17 அன்று வெளியிடப்படும். வரும் ஏப்ரலில் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது. 
பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img