திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

மோடி பதில் சொல்லியாக வேண்டும்!' - மு.க.ஸ்டாலின் காட்டம்
புதன் 08 நவம்பர் 2017 16:11:56

img

பண மதிப்பிழப்பின்  ஓராண்டு நிறைவை கறுப்பு தினமாக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கின்றன. தமிழகத்தில், தி.மு.க தன்னுடன் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, தமிழகத்தில் எட்டு மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. மதுரை அண்ணா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.  முதலில், இந்த இடத்தில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளிக்காத காவல்துறை, நேற்று இரவு அனுமதி அளித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள, மு.க.ஸ்டாலின் நேற்று மாலையே மதுரை  சென்றுவிட்டார்.

இன்று காலை, கறுப்புச் சட்டை அணிந்து, கட்சித் தொண்டர்களும் கூட்டணிக் கட்சியினரும் திரளாகக் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ''125 கோடி மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்திய இந்த நாள், கறுப்பு நாள். நள்ளிரவில் சுதந்திரத்தைப் பெற்ற நாம், தற்போது நள்ளிரவில் சுதந்திரத்தை இழந்து நிற்கிறோம். ஒட்டுமொத்த பணப்புழக்கத்தையும் முடக்கிய ஆட்சி, மோடி தலைமையிலான ஆட்சி. எந்தத் திட்டமிடலும் இல்லாமல், திடீரென்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்கள்.

அடுத்து, ஜி.எஸ்.டி-யால் வணிக சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கொண்டுவருவதற்கு முன் நான் அவகாசம் கேட்டேன். ஆனால் அவர்கள் தரவில்லை. மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர், ஜி.எஸ்.டி-யை மாற்றியமைக்க வேண்டும் என்று இப்போது கூறியுள்ளார் . தற்போது, குஜராத் தேர்தலுக்காக அதில் மாற்றம் கொண்டுவருவதாக மோடியும்  கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும், எதற்கும் அஞ்சாமல் தி.மு.க எதிர்க்கும். மக்கள் பாதிக்கப்பட்டத்தற்கு மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் '' என்று பேசினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img