புதன் 14, நவம்பர் 2018  
img
img

கட்டுகடங்காத மேம்பாட்டுத் திட்டங்களை அனுமதித்தது ஏன்?
புதன் 08 நவம்பர் 2017 13:12:01

img

கோலாலம்பூர், 

பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழை, திடீர் வெள்ளத்திற்கு அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுக்கடங்காத மேம்பாட்டுத் திட்டங்களே காரணம் என்று பலமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள வேளையில் கண்மூடித்தனமான மேம்பாட்டுத்திட்டங்களுக்கு எவ்வாறு அனுமதி தரப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

என்றும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில்  மட்டும் பினாங்கு  மாநிலத்தில் ஒன்பது நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.  கடந்த ஆண்டு2016 அக்டோபர் 14 ஆம் தேதி  தஞ்சோங் பூங்காவில் ஜாலான் லெம்பா பெர்மாய் - புஞ்சாக் எர்ஷ்கின் சாலையில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தை தொடங்கி  கடந்த சனிக்கிழமை எழுவர் பலியான திடீர் வெள்ளம் வரையில் சங்கிலித் தொடரைப்போன்று அடுக்கடுக்காக நிலச்சரிவு, திடீர்வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவம் நிகழும் போது பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் மண்ணின் தோழர் கழகமும் கடுமையான குற்றச்சாட்டு களை  முன்வைத்த போது அவற்றை மாநில அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது. கடந்த 2016 நவம்பர் 7 ஆம் தேதி  அதாவது தீபாவளி முடிந்து ஒரு வாரத்தில்  தெலுக் பஹாங், ஜாலான் ஊஜோங்கில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தின் போது அப்பகுதிக்கு அருகில் உள்ள மலைச்சாரல் பகுதியில் மலைகள் வெட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத்திட்டமே முக்கிய காரணம் என்று தங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக  பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகமட் இட்ரிஸ் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Read More: Malaysia Nanban News Paper on 8.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img