செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கான விடுதலை: நாளை உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை
திங்கள் 06 நவம்பர் 2017 13:43:38

img

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை, நாளை உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்றும்,  அதனால், தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலனைசெய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது. 

அதன் பின்னர், பரோல் நிறைவடைந்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் பேரறிவாளன். இந்த வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைமீதான இறுதிக்கட்ட விசாரணை, நாளை உச்ச நீதிமன்றத்துக்கு வருகிறது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.

இந்நிலையில் மாயாவதியின் கட்சியில்

மேலும்
img
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.

நேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு

மேலும்
img
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த

மேலும்
img
எந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.? அழைப்புவிடுக்கும் கட்சிகள்!

அ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன

மேலும்
img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img