செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
சனி 04 நவம்பர் 2017 18:41:34

img

ஷா ஆலம், 

சிலாங்கூர் மாநிலத் தில் உள்ள இந்தியர் களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் என்ற உறுதிமொழியுடன் வெ.312 கோடி மதிப் புள்ள 2018ஆம் ஆண் டுக்கான மாநில பட்ஜெட்டை  அறிவித்த சிலாங் கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, இது முழுக்க முழுக்க மக்களுக்கான நல்வாழ்வு பட்ஜெட் என்று வர்ணித்தார். 2017 பட்ஜெட்டிற்காக ஒதுக் கப்பட்ட வெ.345 கோடி தொகை யுடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 10 விழுக்காடு குறைவாகும்.

இந்த தொகையில் வெ.166 கோடி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்  பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இது ஒரு விழுக்காடு அதிகமாகும்.

3 மாத போனஸ்

வாழ்க்கைச் செலவினங்கள்  அதிகரித்துவிட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு பல்வேறு சவால்கள்  காத்திருக்கும் பட்சத் தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 2 மாத போனஸ் தொகை 3 மாதங்களாக அதிகரிக்கப்படுகிறது என்றார் அஸ்மின்.

மாநில மேம்பாட்டிற்கு  கடுமையாக பாடுபட்டு வரும் மாநில அரசு ஊழியர்களின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில் ஒன்று கூடும் வகையில் இந்த மூன்று மாத போனஸ் அறிவிக்கப்படுவதாக அவர் சொன்னார். இதன் வழி மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மூன்று மாத போனஸ் தொகையை பெறுவர். 

இந்த போனஸ் தொகையை 6,725 சமய ஆசிரியர்கள், 78 சீன புதிய கிராமத் தலைவர்கள், 48 இந்திய சமுதாயத் தலைவர்களும் பெறுவர்.

Read More: Malaysia nanban News paper on 4.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img