திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

சொந்த மகள் களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய  மாது கைது 
புதன் 01 நவம்பர் 2017 13:05:30

img

ஜொகூர்பாரு, 

எட்டு மற்றும் பத்து வயதே நிரம்பிய தனது சொந்த மகள் களை விபச்சாரத்தில் ஈடுபடு த்திய குற்றச்சாட்டின் பேரில் 39 வயது மாதுவை போலீசார் கைது செய்துள்ளனர். லார்கின் என்ற பகுதியிலுள்ள மலிவுவிலைத் தங்கும் விடுதி ஒன்றில் இக்குற்றங்களை அப்பெண் புரிந்துள்ளதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் கலில் காதீர் கூறினார். அந்தச் சிறுமிகளை இத்த கைய கொடுமைக்கு ஆளாக்கிய ஒவ்வொரு முறையும், மூன்று வங்காளதேச ஆடவர்களிடமிருந்து அப்பெண் 50 ரிங்கிட்டை கட்டணமாகப் பெற்று வந்துள்ளார் என்று அவர் தெரிவித்தார். 

தாமான் பிந்தாங் என்ற இடத்தில் அப்பெண் கைது செய்யப்பட்டார். அவரது இரு மகள்களும் சுல்தானா அமினா மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் சமூக நல இலாகாவின் பாதுகாப்பில் வைக்கப்படுவர் என்று டத்தோ கலில் சொன்னார். 

குற்றவியல் சட்டம் 372 மற்றும் 376 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடர்பில், அந்த மூன்று வங்கா ளதேச ஆடவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img