திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

சாலை விபத்தில் தேவேந்திரன் பலி
புதன் 01 நவம்பர் 2017 11:26:30

img

காப்பார்,

மதிய உணவுக்காக பணியிடத் திலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த இந்திய இளைஞர் சாலை விபத்தில்  உயிரிழந்தார். காப்பார் சாலை 81/2 கல், ஜேபிஜே வாகன பயிற்சி மையத்திற்கு அருகே நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் இந்த துயரம் நிகழ்ந்தது. தாமான் கிள்ளான் உத்தாமாவிலிருந்து காப்பார் தாமான் ஸ்ரீ வாங்கியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்த தேவேந்திரன் கலைச்செல்வன் (வயது 18) நான்கு சக்கர இயக்க வாகனத்தால் மோதப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தலையில் பலத்த காயத்திற் குள்ளானதாக நம்பப்படும் தேவேந்திரனின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்து வமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் லொஜிஸ்டிக் துறையில் டிப்ளோமா துறையில் கல்வி முடித்த தேவேந்திரன், கிள்ளான் உத்தாமாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்ததாக தெரிய வருகிறது.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img