img
img

மத்திய அரசின் பட்ஜெட் 2018 வெறும் தேர்தல் வெற்றிக்கான வெற்று வாக்குறுதிகள்தான்.
செவ்வாய் 31 அக்டோபர் 2017 18:24:39

img

கோலாலம்பூர், 

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நிராகரிப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். கடந்த 2009 ஆம்  ஆண்டிலிருந்து தாங்கள் அனுபவித்து வரும் வேதனையை இந்த பட்ஜெட் போக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மலேசியர்கள் வேதனையை அனுபவித்து வருவதை பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தேசிய முன்னணி யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக் கும் தாம் நினைவுறுத்துவதாக அவர் கூறினார்.

ஜெர்லூனில் விவசாயிகள், பாகான் டத்தோவில் மீனவர்கள், செம்பு ரோங்கில் குடியேற்றவாசிகள், பெக்கானில் சிறுதோட்டக்காரர்கள், தித்திவங்சாவில் தொழில்துறை தொழிலாளர்கள், புத்ராஜெயாவில் பொதுச்சேவை ஊழியர்கள் என பலர் டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராக பதவியேற்றதிலிருந்து வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.

நாட்டின் வரவு செலவு திட்ட வரலாற்றில் 2018ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மிக பெரிய நிதி ஒதுக்கீடுகள் கொண்ட பட்ஜெட்டாகும். ஆனால், மேம்பாட்டிற்கான ஒதுக்கீட்டின் விகிதம் இதுவரையிலான பட்ஜெட்டுகளை காட்டிலும் மிக குறைவாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் 17 சதவிகிதம் மட்டுமே மேம்பாட்டிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

2012இல் 22.0 விழுக்காடாகவும் 2013இல் 19.8 விழுக்காடாகவும் 2014இல் 17.6 விழுக்காடாகவும் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு விகிதம் அதிகரிக்கப்பட்டாலும் 20 விழுக்காட்டிற்கு குறைவாகவே அது இருந்தது.

Read More: Malaysia Nanban News Paper on 31.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img