புதன் 14, நவம்பர் 2018  
img
img

மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு  சட்டவிரோதமாக மணல் விற்பனை 
செவ்வாய் 31 அக்டோபர் 2017 18:08:44

img

பெட்டாலிங்ஜெயா, 

மலேசியாவிலிருந்து மணல், இந்தியாவிற்கு  ஏற்றுமதி செய்யப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மணல் ஏற்றுமதியை அனுமதிக்கும் ஏ.பி. பெர்மிட் இதுவரையில் யாருக்கும் அங்கீகரிக்கப்பட்டதாக பதிவுகள் இல்லை என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனாய்டி துவாங்கு ஜப்பார் தெரிவித்தார். இங்குள்ள ஒருவரின் தில்லுமுல்லு  வேலையாக கூட இது  இருக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மலேசியாவிலிருந்து மணல், முதல் கட்டமாக  தமிழ்நாட்டை சென்றடைந்துள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி வினவிய போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த இந்திய பத்திரிகை செய்திப்படி, கடந்த வாரம் 55 டன் எடை கொண்ட மணல், தமிழகத்தில் புதுக்கோட்டையை தலமாக கொண்ட ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா இறக்குமதி செய்துள்ள அந்த மணலின் விலை ஒரு கனஅடிக்கு 60 ரூபாய் அதாவது 4 மலேசிய ரிங்கிட்டாகும்.தமிழ் நாட்டில் உள்ள ஆறுகளிலிருந்து எடுக்கப்படும் மணலின் விலை 110 ரூபாய் முதல் 120 ரூபாயாகும். மலேசியா மணல் அங்கு  50 விழுக்காடு மலிவாகும். மலேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து  இந்தியா இறக்குமதி செய்யும் மணல் இந்தியாவின் கட்டுமானத்துறையை மேலும் வலு சேர்க்கும் என்று  சென்னையில் உள்ள தென் மாநிலங்களுக்கான இந்தியாவின் கட்டுமானத்துறை சங்கத்தின் செயலாளர் எஸ். ராமபிரபு தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் ஜூனாய்டி, மலேசியாவில் தங்களுக்கு  வழங்கப்பட்ட ஏ.பி. பெர்மிட்டை எந்தவொரு நிறுவனமும் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என்றார்.  அப்படி நடந்து இருக்குமானால் அவர்களுக்கான பெர்மிட் லைசென்ஸை பறிமுதல்  செய்வது குறித்து பிரதமரிடம் தாம் பேசவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban News Paper on 30.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img