திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

ரிங்கிட்டின் மதிப்பு 18 விழுக்காடு ஒரு சாதனையா?
வெள்ளி 27 அக்டோபர் 2017 12:46:33

img

கோலாலம்பூ ர், 

மற்ற நாட்டு நாணயங்களைவிட மலேசிய ரிங்கிட், நல்ல அடைவு நிலையை கண்டிருப்பதாக பெருமைப்பட்டுக்கொள்வதில் என்ன சாதனை வேண்டி யிருக்கிறது என்று பி.ஜே.உத்தாரா  ஜ.செ.க. நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா நேற்று கேள்வி எழுப்பினார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், பிரதமர்  பொறுப்பை ஏற்ற போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ஒரு டாலருக்கு ரி.ம.3.58  என்ற நிலையில் இருந்ததாக டோனி புவா நினை வூட்டினார். 

ஆனால் அதே ரிங்கிட்டின் மதிப்பு தற்போது  டாலருக்கு  ரி.ம. 4.24 என்று மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு கண்டுள்ளது. உண்மையைச்   சொல்லப்போ னால்,  2013   ஆம்   ஆண்டு  பொதுத்   தேர்தலிலிருந்து  ரிங்கிட் மதிப்பு ஆண்டுதோறும்   சரிவுகண்டு வந்துள்ளது. 2015 இல் எண்ணெய் விலை இறக்கம் கண்டபோது   ரிங்கிட்டின்   மதிப்பு   அதற்கு   முந்தைய ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது. 

அப்போது  பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்,   ரிங்கிட்டின்   மதிப்பு   மீண்டும்   உயர்வது  திண்ணம்   என்று    உறுதி   கூறினார். ஆனால்,  2015 ஆம் ஆண்டிலி ருந்து 2016 ஆம் ஆண்டு வரை  ரிங்கிட்டின் மதிப்பு தொடர் சரிவுதான்.

Read More: Malysia Nanban Tamil Daly on 27.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img