வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

`ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது’: கமல்
வியாழன் 26 அக்டோபர் 2017 18:13:42

img

கமல்ஹாசன் ஆனந்த விகடனில் எழுதிவரும் `என்னுள் மையம் கொண்ட புயல்' தொடரில், ‘ இனியும் தாமதியாது கூடுவோம். பட்டிமன்றம் போட்டுப் பேச அல்ல; செயல் திட்டங்கள் தீட்ட. திட்டங்களுடன் நான் கூட்ட நினைப்பது வெறும் தொண்டர் கூட்டத்தை மட்டுமல்ல; தலைவர்களின் பெருங்குழுவை.

இதை ஒரு தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் இப்போதே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். தியாகமாக நினைத்து வருபவர்கள் எதையோ இதற்காக இழப்பது போன்ற உணர்வுடன் வந்து எம்மைத் தேவையில்லாமல் கடன்படச் செய்வார்கள். தமிழகத்துக்குச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும். நம்மால் முடியும், என்னால் முடியும். என்னால் முடியும் என்றால் உன்னாலும் முடியும். நாம்  தொடர்பில் இருக்கவும், நம் இயக்கத்தார் மக்களுடனும் என்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக இருக்கவும் சில ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைப் பற்றிய அறிவிப்பு, வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும்’ என்று எழுதியிருந்தார். 

இதனால், நேரடி அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பை கமல், தனது பிறந்த நாளான நவம்பர் 7-ல் வெளியிடுவார் என்று பரவலாகத் தமிழ் ஊடகங்கள் முதல் தேசிய ஊடகங்கள் வரை செய்தி வெளியானது. இந்தநிலையில், நவம்பர் 7-ல் புதிய கட்சி அறிவிப்பு இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7-ல் இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அரசியல் கட்சி குறித்த அறிவிப்புகளுக்கு கமல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
img
தீவிரவாதிகளை உருவாக்கி அமைச்சரை கொல்லனும்??;என்று பேசிய தி.மு.கவினர் மீது புகார்!!

ஆர்ப்பாட்டத்தில் அரிமழம் ஒ.செ. ராமலிங்கம் பேசும் போது...

மேலும்
img
நிலானி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

மருத்துவமனையில் அனும திக்கப்பட்டுள்ள அவருக்கு

மேலும்
img
சிறுமியை 28 நாட்கள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்...படுகாயமடைந்த சிறுமி....

அச்சிறுமியிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில்

மேலும்
img
நடிகை விஜயசாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராகுல்காந்தி உத்தரவு

தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img