புதன் 21, நவம்பர் 2018  
img
img

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு இந்தியா 5,85,000 டாலர்கள் பெறுமான உதவி
புதன் 25 அக்டோபர் 2017 19:12:59

img

உயர்கல்வி வளர்ச்சியில் இலங்கையுடன் கூட்டுறவுக்காக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு 5,85,000 அமெரிக்க டாலர்கள் பெறுமான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்துக்கு வேளாண்மை மற்றும் பொறியியல் துறை வளர்ச்சிக்காக இந்த உதவிகளை இந்திய அரசு செய்துள்ளதாக இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வேளாண் மற்றும் பொறியியல் துறை வளர்ச்சிக்காக 5,85,000 டாலர்கள் பெறுமான உபகரணங்கள் மற்றும் வாகனங்களை இந்தியா வழங்கியுள்ளது.

இதோடு, கல்விப் பாடத்திட்ட மேம்பாடு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, துறைசார் பரிமாற்றங்கள் ஆகிய ஆதரவுகளையும் இந்தியா வழங்குகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றையும் 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்தியா கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
மகிந்த, நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலை

விலகி பொதுஜன பெரமுனவில் உறுப்பினர்களாக

மேலும்
img
சிறிசேனாவின் சர்வாதிகாரப் போக்கு: சாடினார் மங்கள சமரவீர  

பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள்

மேலும்
img
ரணிலை பிரதமராக்குவதற்கு மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை 

பிரதமர் பதவிக்கு ரணில் - மகிந்த இரண்டு பேரும்

மேலும்
img
கருணா வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல் 

கருணா தனது டுவிட்டர் பக்கத்தில்

மேலும்
img
ரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...

இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img