img
img

குஜராத்துக்கு மோடி பதறிப்போய் ஓடுவதற்குப் பின்னணி என்ன?
புதன் 25 அக்டோபர் 2017 19:08:03

img

குஜராத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் மோடிக்கு சாதாரணமான தேர்தலாக இருக்கப்போவதித்லை. கடும் சவால் காத்திருக்கிறது. பாரதிய ஜனதா அரசுமீது குஜராத் மக்க ளிடையே ஒருவித வெறுப்பு இருக்கிறதாம். முக்கியமாகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்ட விதம் குஜராத் வர்த்த கர்களை, தொழிலதிபர்களைப் பெரிதும் பாதித்துள்ளது. குஜராத் வணிகர்களை திருப்திபடுத்தும் நோக்கில்தான் ஜி.எஸ்.டி கவுன்சில் வரியில் சில மாற்றங்களை மேற்கொள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 

2014-ம் ஆண்டு குஜராத்திலிருந்து மோடி டெல்லிக்கு இடம்பெயர்ந்த பிறகு, பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கி யுள்ளது. சரியான தலைமை இல்லாததும் ஒரு காரணம். குஜராத்தில் 2002-ம் ஆண்டிலிருந்து பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. 2007-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மோடி முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தில் பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்கு வித்தியாசம் 9.42 சதவிகிதம். 2012-ம் ஆண்டு மோடி ஆட்சியில் இருக்கும்போது 9 சதவிகிதமாக குறைந்தது. மோடி குஜராத்திலிருந்து வெளி யேறிய பின், காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமான அளவு வாக்கு வங்கி அதிகரித்திருப்பது 2015-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தெரியவந்துள்ளது.  

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 31 மாவட்டப் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சி 47.84 சதவிகித வாக்குகளுடன் 24 மாவட்டப் பஞ்சாயத்துகளைக் கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சியால் 6 மாவட்டப் பஞ்சாயத்துகளையே கைப்பற்ற முடிந்தது. தாலுகா பஞ்சாயத்துகளில் 2010-ம் ஆண்டு 26 இடங்களே பெற்றிருந்த காங்கிரஸ் 2015-ம் ஆண்டு, 134 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 42.42-ல் இருந்து 46 சதவி கிதமாக அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியால் 67 இடங்களையே பிடிக்க முடிந்தது. வாக்கு சதவிகிதம் 48.51-ல் இருந்து 42.32 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 

காற்று தங்களுக்குச் சாதகமாக அடிப்பதைப் புரிந்துகொண்ட சோனியா காந்தியின் தனிச் செயலாளர் அகமது பட்டேல், ''இந்த முறை குஜராத்தில் வெற்றி பெற முடியவில்லை என்றால், வேறு எப்போதும் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது'' எனத் திட்டமிட்டு காங்கிரஸ் தொண்டர்களை முழு வீச்சில் களமிறக்கியிருக்கிறார். மக்களுக்கு மோடி மீதுள்ள வெறுப்பை வாக்குகளாக மாற்றும் நோக்கில்தான் ராகுல் காந்தியும் குஜராத்தில் சுற்றுப்ப யணம் மேற்கொண்டுள்ளார். 

மோடி டெல்லியில் வாழ்ந்த காலத்தில் பதிதார் தலைவர் ஹர்திக் பட்டலும் , பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு சரிய காரணமாக அமைந்தார். பட்டேல் இனத்தவரை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்ற போராடி வரும் ஹர்தீக் பட்டேல், விவகாரத்தைக் கையாளத் தெரியாததால்தான் ஆனந்தி பென் முதல்வர் பதவியில் இருந்து சத்தமில்லாமல் விலக்கப்பட்டார். குஜராத் மக்கள் தொகையில் பட்டேல் இனத்தவர் 12 சதவிகிதம் உள்ளனர். வர்த்த கம், அரசியலில் செல்வாக்குமிக்கவர்கள். 

பட்டேல் இனத்தவரை ஓ.பி.சி, பிரிவில் சேர்க்க, குஜராத் ஷத்ரிய தாக்கூர் சேனா அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாக்கூர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கிறார். இவர், குஜராத் ஓ.பி.சி/எஸ்.சி./ எஸ்.டி பிரிவு அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்தச் சமூகத்தினர் குஜராத்தில் 78 சதவிகிதம் பேர் இருப்ப தாக அல்பேஷ் தாக்கூர் சொல்வதும் வழக்கம். குஜராத்தில் 22 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஓ.பி.சி மக்களைப் புறக்கணித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள, அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

எப்படிப் பார்த்தாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குஜராத்தில் 55 சதவிகிதம் வரை இருக்க வாய்ப்பு இருப்பதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதுவும் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவுதான். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
img
ரூ.158.5 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

திட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

மேலும்
img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img