வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

செல்போன் நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்க மாட்டேன்!' - மம்தா பானர்ஜி காட்டம்
புதன் 25 அக்டோபர் 2017 19:05:19

img

ஆதார் கார்டுடன் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, `செல்போன் நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும், `செல்போன் நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்க மாட்டேன். வேண்டுமானால் அவர்கள் என் போன் எண்ணைத் துண்டிக்கட்டும்' என்று பேசியுள்ளார். மேலும், `திரிணாமூல் காங்கிரஸ் நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு நாளாக அனுசரிக்கும். அன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் கறுப்புக் கொடி ஏந்தி பேரணிகள் நடத்தப்படும்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்திய அளவில் 18 எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரண்டு, நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இது குறித்து காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், திரிணாமூல் காங்கிரஸில் ஓப்ரையன் மற்றும் ஷரத் யாதவ் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆசாத், `இந்திய அளவில் செயல்படும் 18 கட்சிகள் நேற்று சந்தித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மன்மோகன் சிங், `இது இந்திய ஜி.டி.பி-யை 2 சதவிகிதம் சரிவடையச் செய்யும்' என்று கணித்தார். அதைப்போலவே நடந்தது.

பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு இரண்டே வாரத்தில் காஷ்மீர் எல்லையில் இருந்த தீவிரவாதிகளின் கையில் புதிய ரூபாய் நோட்டுகள் இருந்தன. எனவே, அப்போது எதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டதோ அதை எதையுமே அது சாதிக்கவில்லை' என்று குற்றம் சாட்டினார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img