செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

’கொசுவைவிட வேகமாகச் செயல்படுங்கள்!’ அமைச்சர் விஜயபாஸ்கர்
புதன் 25 அக்டோபர் 2017 19:00:19

img

மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நலன் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் டெங்கு ஒழிப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, டெங்கு பாதிப்பதைச் சுகாதாரத்துறையின் பிரச்னையாகக் கருதாமல், முதல்வர் அனைத்துத்துறை பிரச்னையாகக் கருதி ஒன்றிணைத்து செயல்படுத்திவருகிறார். மருத்துவத்தில் மதுரை மாவட்டம் இரண்டாவது தலைநகரமாகச் செயல்பட்டுவருகிறது.

கொசுவின் உற்பத்தி மிகவும் வீரியமானது. அதன் முட்டைகளின் பெருக்கமும் அதிகம் கொசுவோடு போட்டிப் போடுவது மிகப்பெரும் சவால்தான். ஆனாலும், அதிகாரிகள் நினைத்தால் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்ப டுத்தி டெங்குவை தவிர்க்கலாம். எனவே, நாம் கொசுவைவிட வேகமாகச் செயல்பட வேண்டும். சுகாதாரத்துறை செயலர் சொல்வதுபோல டெங்குவின் தாக்கம் ஏறுவரிசையில் செல்லாமல் தற்போது மிதமாகச் செல்கிறது. எனவே இன்னும் அதிக வேகமாகச் செயல்பட்டு டெங்குவை ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img