திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

மகளுடன் தகாத உறவு. ஆடவருக்கு 81 ஆண்டு சிறை
புதன் 25 அக்டோபர் 2017 12:51:01

img

(எம்.கே.வள்ளுவன்)

கோத்தா திங்கி,

தன் மகளுடன் தகாத உறவு கொண்டிருந்த குற்றத்திற்காக ஆடவருக்கு கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று 81 ஆண்டு சிறை வாசத்தை அனுபவிக்க உத்தர விடப்பட்டது.

அத்துடன் 8 பிரம்படிகள் வழங்கும்படியும் செஷன்ஸ் நீதிபதி சஹிலா முகமட் யூசோப் உத்தரவிட்டார்.முன்னதாக 50 வயதுடைய அந்த லோரி உதவியாளர் மீது தகாத உறவு, பாலியல் உறவு போன்ற ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி கோத்தா திங்கி தாமான் ஸ்ரீ சௌஜானாவில் அப்போது 11 வயதாக இருந்த தன் இரண்டாவது மகளிடம் காமச்சேட்டை புரிந்ததாக அந்த ஆடவர் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2012 மார்ச் மாதம் பிற்பகல்  2.00 மணியளவில் தாமான் ஸ்ரீ சௌஜானாவிலுள்ள வீட்டிலும்  2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நள்ளிரவு 12.00 மணியளவில் கோத்தா திங்கி பெல்டா ஆயர் தாவார் 3லுள்ள வீடொன்றிலும் மேலும் இரு காமச்சேட்டைகளை அந்த ஆடவர் புரிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.2014 அக்டோபர் மாதத்தில் மாலை 5.00 மணிக்கும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நள்ளிரவு 12.00 மணிக்கும் கோத்தா திங்கி பெல்டா ஆயர் தாவார் 3லுள்ள வீடொன்றில் தன் இரண் டாவது மகளிடம் காமச்சேட்டைகள் புரிந்ததன் தொடர்பில் மேலும் இரு குற்றச்சாட்டுகளும் அந்த ஆடவர் மீது கொண்டு வரப்பட்டது.

Read More: Malaysia Nanban Newspaper on 25.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img