செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

ஷாபிக்கு கைமாறிய வெ.95 லட்சம்.
செவ்வாய் 24 அக்டோபர் 2017 12:20:56

img

புத்ராஜெயா,

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து வெ.95 லட்சத்தை வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை பி.கே.ஆர். நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) வழங்கியது.இங்குள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் புகார் செய்ததை அடுத்து, இவ்விவகாரம் குறித்து விசா ரணை செய்யும் படி பி.கே. ஆர். உதவித் தலைவர் ஷம்சுல் இஸ்கந்தார் முகமட் அக்கின், அதன் மகளிர் தலைவி ஜுராய்டா கமாருடின் இருவரும் எம்.ஏ. சி.சி.-யை வலியுறுத்தினர்.

இந்த வெ.95 லட்ச விவகாரம் ஒன்றும் புதியதல்ல. ஆனால், இது பற்றி தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று ஷாம்சுல் தெரிவித்தார்.எங்களிடம் அதற்கான ஆதாரம் உள்ளது. அதை நாங்கள் சமர்ப்பித்து விட்டோம். இது பற்றி மேலும் எங்களால் எதையும் வெளிப்படையாகக் கூற முடியாது. இன்னும் ஏழு தினங்களில் இதற்கான பதிலை அளிக்க எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றார் அவர்.

தனக்கு நியாயமான ஒரு வழக்கு விசாரணை நடத்தப்படவில்லை, நியாயமான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் தன் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாண்டு ஜூன் மாதம் ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்திருந்தார்.

குறிப்பிட்ட இந்த வழக்கு விசாரணையில் மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் கூட்டரசு நீதிமன்றத்திலும் அரசாங்கத்திற்கான இடைக்கால வழக்க றிஞராக செயல்பட்ட ஷாபி, 2013 மற்றும் 2014-இல் இரு பகுதிகளாக பிரதமர் நஜீப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெற்றார் என்று சரவா ரிப்போர்ட் அதே மாதத்தில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அன்வார் இந்த வழக்கை பதிவு செய்திருந்தார்.

Read more: Malaysia Nanban News Nanban on 24.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img