வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

உங்களுடன் பயணிப்பது கடினம்’ - பா.ஜ.க-விலிருந்து விலகிய மகளிரணிச் செயலாளர்
சனி 21 அக்டோபர் 2017 16:21:03

img

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த ஜெமீலா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெமீலா கூறியிருப்பதாவது, “நான் கடந்த 2 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணிச் செயலாளர் மற்றும் ஊடகச் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராகக் கட்சிப் பணி செய்து வந்தேன் . பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன்.

இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாகக் கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து வேறுடுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் தமிழக பா.ஜ.க-வின் கொள்கைகள் எழுத்தளவிலும் செயலளவிலும் மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. என்னைப்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன். எனவே இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img