சனி 22, செப்டம்பர் 2018  
img
img

மலேசியாவிற்கு  ஜி.எஸ்.டி.  வரி தேவயில்லை.
சனி 21 அக்டோபர் 2017 12:19:33

img

மலேசியாவிற்கு  ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள் சேவை வரி தேவையில்லை. மக்களுக்கு பெரும் சுமையைக் கொடுத்து வரும் அந்த வரி நாட்டின் வரு மானத்திற்கு பாதிப்பை கொண்டுவராமல் அதனை அகற்றலாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்  முகமட்  பரிந்துரை செய்துள்ளார்.

தேவையற்ற உதவிகளை வழங்கி மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்திலேயே டத்தோஸ்ரீ நஜிப் துன்  ரசாக் தலைமையிலான அரசாங்கம் இந்த ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. இதில் பிரிம் எனப்படும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை, மீனவர்களுக்கான 300 வெள்ளி அலவன்ஸ், கிராம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் தலைவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 800 வெள்ளி அலவன்ஸ், அன்றாட

செலவு உட்பட தகுதி பெறாதவர்களுக்கு பல்வேறு ஊக்குவிப்புத் தொகைகளை வழங்குவதும் இதில் அடங்கும் என்றார். நஜீப் தலைமையிலான அர சாங்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு புகழ்மாலை சூட்டிக் கொள்வதற்காக அதிகமான அரசாங்கப் பணத்தை செலவு செய்வதாலே அவர் தலை மையிலான தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தியது, அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 16 லட்சமாக உயர்த்தியது, பெமாண்டு உட்பட பல்வேறு அரசாங்க துணை நிறுவனங்களை அமைத்தது போன்ற அவரின் செயல்கள் நாட்டின் நிதி வளத்தை மேலும் மோசமாக்கியுள்ளது என்றார்.

Read More: Malysia Nanban News Paper on 21.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img