வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு: அற்புதம்மாள் கோரிக்கை
வெள்ளி 20 அக்டோபர் 2017 17:30:55

img

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

இதனிடையே, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்குப் பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் தந்தை குயில்தாசனுக்குத் தொடர் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த வேளையில் மகனின் பரோல் முடிவடைதல் சிகிச்சையின் காலத்தில் பாதியிலேயே வீடு திரும்பியுள்ளார் குயில்தாசன். மேலும், பேரறிவாளனின் சகோதரிக்கும் சமீபத்தில் கற்பப்பை அறுவைசிகிச்சை நடந்திருப்பதன் காரணமாக அவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இருவரது மருத்துவ சிகிச்சைக்கும் உடனிருந்து கவனித்துக்கொள்ள தனது மகன் பேரறிவாளனும் உடனிருந்தால் உறுதுணையாக இருக்கும் என்று எண்ணி பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

‘பொதுவாக பேரறிவாளனை மற்ற சிறைவாசிகளோடு ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கப்படும் எனத் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. விடுதலை பெறவிருக்கும் கைதிக்கு பரோல் வழங்குவதில் எந்தத் தடையும் இருக்காது என்பதால் இந்த முறையும் அவருக்குப் பரோல் நீட்டிப்பு வழங்குவதற்கான வாய்ப்புள்ளது’ என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img