வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

கைத்துப்பாக்கியை வைத்திருந்த காதல் ஜோடி
சனி 17 செப்டம்பர் 2016 15:46:10

img

நேற்று முன்தினம் இரவு தாமான் மௌண்ட் ஆஸ்டினில் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததற்காக ஒரு காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். இரவு 9.30 மணியளவில் 22 வயதுடைய அந்த ஜோடியை வழக்கமான சோதனையின் போது வீடமைப்புப் பகுதியில் கைது செய்ததாக ஜொகூர்பாரு தென் பகுதி மாவட்டபோலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சுலைமான் சாலே தெரிவித்தார். தாமான் மௌண்ட் ஆஸ்டின் ஜாலான் முத்திராயா மாஸ் 10/19இல் வழக்கமான சுற்றுக்காவல் வண் டியில் சுற்றுக்காவல் மேற்கொண்டிருந்த போது அவ்விருவரும் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்த ஜோடி சென்ற வாகனம் புக்கிட் இண் டாவில் திருடப்பட்ட வாகனம் என்பதை கண்டறிந்த போலீசார் வாகனத்தை தடுத்து சோதனை மேற்கொண்ட போது வாகனத்தின் வாகனமோட்டி அமர்ந்திருக்கும் பகுதியின் அடியில் துப்பாக்கி ரவைகள் இல்லாமல் அந்த கைத்துப் பாக்கியை போலீசார் கைப்பற் றியதாக சுலைமான் சாலே குறிப்பிட்டார். அந்த கைத்துப்பாக்கி தங்க ளுடையது அல்ல என அந்த ஜோடி மறுத்ததாக தெரிவித்த அவர் ஆடவர் வீட்டை உடைத்து திருடுதல், வாகன திருடல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக் காக தண்டனை பெற்றுள்ள தாகவும் குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img