சனி 22, செப்டம்பர் 2018  
img
img

அமெரிக்க வரலாற்றில் மோசமானது ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்’ - ட்ரம்ப் அதிரடி
சனி 14 அக்டோபர் 2017 18:16:37

img

ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் மிகமோசமானது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். 

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது கடந்த 2015-ல் ஈரான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தைத்தான் ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய  ட்ரம்ப்  ‘ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் என்பது அமெரிக்க வரலாற்றிலேயே மிகமோசமானது. அந்த ஒப்பந்தத்தை என்னால் அங்கீகரிக்க முடியாது.  ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வுசெய்து 60 நாள்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பிறகு பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்

ஈரான் அணுஆயுதத்தைத் தயாரிக்கக் கூடாது என்பதை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தோழமை நாடுகளும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை நாடுகளுடன் இணைந்து முழுமுயற்சி எடுக்கப்படும். அந்த முயற்சிகள் தோல்வியடைந்தால் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மொத்தமாக ரத்து செய்யப்படும்’ என்று பேசினார். ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img